Tuesday, October 22, 2013

2014 ம் ஆண்டு நாட்காட்டி வெளியீடு - 2014 Tamil Calendar Mistakes

பிழையான 2014 வருட காலண்டர்கள் விற்பனையில் உள்ளது !!

தற்பொழுது 2014 ம் ஆண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டாலும் திதி, நட்சத்திர முடிவு நேரங்களில் எண்ணற்ற பிழைகள் உள்ளது.

இவைகள் வானியல் துறைகளான இஸ்ரோவின் தகவலுடன் ஒத்துப்போகாமல் மிகவும் பிழையுடன் காணப்படுகிறது.

சந்திரனுக்கு வின்கலத்தை அனுப்பிய இந்திய அரசு இப்படி தவறாக தகவலுடன் அமாவாசை, பௌர்னமி, முடிவுகளை வெளியிடும் காலன்டர்களை தடை செய்ய வேண்டும்.

இந்த காலண்டர்கள் அறிவியலுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. குறிப்பாக திதி முடிவுகள் நாஸா மற்றும் இஸ்ரோவினரை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.

பொதுமக்கள்  வானியல் துறைக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போக,  தொடர்பில்லாத இதுபோன்ற தவறான காலன்டர்களை புறக்கணிக்கவேண்டும்.

காலண்டர் என்பது வானியல் இந்த நிகழ்வு பூமிக்கு பொதுவானது. அப்படி இருக்க வானிலை துறையினர் செய்யும் சாகஸங்களை கேவலப்படுத்தும் இந்த காலண்டர் தயாரிப்பவர்களை அரசு ஒழங்குப்படுத்த வேண்டும்.

வானியல் அறிவு கொஞ்சம்கூட இன்றி  இப்படி காலன்டர் வெளியிட்டால் இதை  நம்பி தெவசம் செய்வதும், குழந்தைக்கு நட்சத்திரம் காண்பதும் தவறாகத்தான் இருக்கும்

வானியல் என்பது அறிவியல் அதை பலதுறைகள் பயன்படுத்துகின்றன அதுபோல்தான் ஜோதிடமும்.

வானியல் இல்லையேல் ஜோதிடம் இல்லை. ஆனால் ஜோதிடம் இல்லையெனில் வானியல் துறை இருக்கம் ...! என்பதை இந்த காலன்டர் தயாரிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு சுமார் 292க்கும் மேற்பட்ட பிழைகள் உள்ளன. இதில் மிக அபத்தமான பிழைகள் 100க்கும் மேல் உள்ளது......இப்படிப்பட்ட காலன்டர்களை மக்கள் புறக்கணித்து இந்திய அரசின் வானியல் துறையினரின் காலன்டர்களை பயன்படுத்துங்கள்.

சந்திரனுக்கு வின்கலத்தை அனுப்ப உதவிய இந்திய வானியல் துறையின் மிக துல்லியமான தகவல் அடங்கிய துறையின் இணையத்தை பார்த்து மிகச்சரியான திதி, நட்சத்திரம் அறிந்துக்கொள்ளுங்கள் (இது இந்திய வானியல் துறையினரின் பிரிவு)

http://www.packolkata.org/ 

மேற்படி இணைய தகவலையும் நீங்கள் வாங்கிய காலண்டரையும் ஒப்பிட்டு பாருங்கள் பின்னர் இந்த கட்டுரையின் உண்மை புரியும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.